1
'ஏய் இத பாருங்க.. ஏம்பா உங்கள தான்.. கொஞ்சம் எழுந்துருங்க'
'என்னடி படுத்தர.. கொஞ்சம் தூங்க விடு. தோ இன்னும் 30 நிமிஷத்துல எழுந்துடுவேன்'
'ஏய்.. ராம், நான் சொல்றத கேளுங்கப்பா'
'அனும்மா, உனக்கு தான் தலையெழுத்து, காலங்காத்தால எழுந்துக்கணும். தோ சூப்பரா குளிச்சி ஆபீஸ்க்கு ரெடி ஆகிட்ட. என்ன விடு பிளீஸ்'
'ராம், விஷயத்த கேளுங்க, பிளீஸ்'
'சொல்லி தொல'
'இப்படி எல்லாம் சொல்ல கூடாது. ஒழுங்கா கேளுங்க'
'அய்யோ.. கடவுளே. சரி, சொல்லு'
'ம்ம்ம்... ஒரு குட் நியூஸ்'
'என்ன, சன் டி.வி.ல எதாவது சொன்னாங்களா'
'சே, என்னாப்பா... நம்பள பத்தி.. நீங்க கெஸ் பண்ணுங்க..'
'அடிப்பாவி ஏண்டி இப்படி தொந்தரவு பண்ணற.. நீயே சொல்லு'
'ம்ம்.. எனக்கு வெக்கமா இருக்கு..'
'ஏய், ரொம்போ எரிச்சல் மூட்டற'
'தோடா.. சும்மாவா சொன்னாங்க, ஆசை 60 நாள், மோகம் 30 நாள்னு?'
'மவளே, உன்னை அடிச்சே கொன்னுடுவேன்'
'சரி சரி.. வந்து.. வந்து..'
'ம்ம்...'
'ம்ம்.. உங்களுக்கு குட்டி ராம் வேணுமா? இல்ல குட்டி அனு வேணுமா?'
'என்னடா சொல்ற?'
'அய், இத்தன நேரம் திட்டினீங்க? இப்போ டபக்குனு எழுந்துட்டீங்க?'
'அத விடு.. நிஜம்மாவா??'
'ம்ம்.. ஆமாம்பா'
2
'ராம், டாக்டர் கிட்ட போய் இருந்தேன்'
'சாரி அனு, என்னால கூட்டிட்டு போக முடியல'
'இட்ஸ் ஓ.கே'
'சரி என்ன சொன்னாங்க?'
'கன்பர்ம் ஆகிடுச்சு.'
'ஓ...'
'என்ன ராம்? யூ டோண்ட் சவுண்ட் குட்?'
'ம்ம்ம்...'
'ராம்...'
'அனு, யோசிச்சு பாரு, இப்போதைக்கு நமக்கு குழந்தை வேணுமா?'
'என்னப்பா இப்படி சொல்லறீங்க?'
'இல்லை அனு. நமக்கு கல்யாணம் ஆகி 5 மாசம் தான் ஆகுது'
'ம்ம்ம்...'
'அது மட்டுமில்லை; நாம கல்யாணதுக்கு முன்னாலேயே டிசைட் பண்ணோம் - கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வருஷம் கழிச்சி குழந்தை பெத்துக்கலாம்னு'
'ஆமாம் ராம், பட் இப்போ உருவாகிடிச்சு. என்ன செய்ய?'
'அதான் சொல்றேன். கலச்சிடலாம்னு'
'என்னப்பா.. விளையாடரீங்களா?? பிளீஸ், திஸ் இஸ் அ க்ரேட் ஷாக்!'
'யோசிச்சு பாரு அனு'
'போங்கப்பா'
'அனு இது ஒண்ணும் புதுசு இல்லை, ஏற்க்கனவே பேசினது தான்'
'ஆமாம் பேசினோம். பட் நவ் திஸ் ஹஸ் கம். இட் இஸ் அன் ஆக்சிடெண்ட்'
'ஹ்ம்ம்.. ஆக்சிடெண்ட், சோ ஷுடுண்ட் டேக் மச் பெயின்.'
'பிளீஸ் ராம். இந்த மாதிரி பேசாதீங்க'
'இல்லை அனு. நமக்குள்ள இன்னும் சண்டை வந்துட்டு தான் இருக்கு. போன வாரம் கூட ரொம்பவே சண்டை போட்டோம்'
'...'
'ரிமெம்பர்! நாம டிவோர்ஸ் - விவாகரத்து வரைக்கும் போயிடுச்சு'
'...'
'அதான் சொல்றேன். நம்மோட விதியே நமக்கு தெரியாதப்போ நமக்குனு ஒரு பர்டன் வேண்டாம். நம்மால இன்னோரு ஜீவன் கஷ்டப்பட வேண்டாம்'
'இருந்தாலும்...'
'இல்லை அனு. நீ படிச்சவ, யோசிச்சு பாரு. நாம சேந்து இருப்போமானே தெரியல. ஒரு வருஷம் வெயிட் பண்ணி பார்ப்போம். அப்பவும் நாம பிரியாம இருந்தோம்னா, வெரி வெல். அப்போ பெத்துக்கலாம். வீ ஆர் ஜஸ்ட் மாரீட். இன்னும் டைம் இருக்கு'
3
'ம்ம்.. நீங்க சொல்றது எனக்கு அதிர்ச்சியா இருக்கு. கொஞ்சம் யோசனை பண்ணிட்டு வாங்களேன்?'
'இல்லை டாக்டர், நாங்க நல்லா யோசிச்சி, கலந்து பேசி தான் இந்த முடிவுக்கு வந்துருக்கோம்'
'இங்க பாருங்க, எத்தனயோ பேர் குழந்தை பாக்கியம் இல்லைனு கஷ்ட்டப்படறங்க. உங்களுக்கு அது அமைஞ்சிருக்கு. ஒதுக்காதீங்க!'
'...'
'சரி, இது உங்க முதல் குழந்தை; சாரி டு சே - இப்போ இதை கலைச்சிட்டு அப்புறம் உங்களுக்கு அந்த வாய்ப்பே இல்லாம பொயிடுச்சுனா?'
'அதை பத்தியும் யோசிச்சிட்டோம். ஏதாவது ஆதரவில்லாத குழந்தையை தத்து எடுத்துக்குவோம்'
'ம்ம்... சரி. ஆனா ஒரு உயிரை கொல்லறீங்களே. அதுக்கு என்ன சொல்லறீங்க?'
'...'
'இல்லை, எல்லத்தையையுமே யோசிச்சிட்டோம். எங்க நிலைமையையும் கன்ஸிடெர் பண்ணி தான் இந்த முடிவுக்கு வந்து இருக்கோம். இப்போதைக்கு எங்களுக்கு குழந்தை வேண்டாம். அப்புறமா பெத்துக்க முடிவு பண்ணியிருக்கோம். அதனால இப்போ இந்த கருவை அபார்ட் பண்ணி விடுங்க'
'ம்ம். நீங்க படிச்சவங்க. நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்துருக்கீங்க. எனக்கு இஷ்டமில்லை. இருந்தாலும் உங்களுக்காக செய்யறேன். வர சனிக்கிழமை காலைல 8 மணிக்கு அட்மிட் ஆகிடுங்க. இன்னும் 4 நாள் டைம் இருக்கு. நல்லா யோசிங்க. வீட்டுல இருக்கற பெரியவங்க கிட்ட மனசு விட்டு பேசுங்க. உங்க ஈகோ எல்லாம் விட்டு ரெண்டு பேரும் பேசுங்க. அதுக்கப்புறமும் இந்த முடிவுலையே இருந்தா வாங்க. இல்லைனா அடுத்த வாரம் இதே நேரம் செக்-அப்புக்கு வாங்க. ஆல் தி பெஸ்ட்'
4
'ஏய்! அனு! என்னம்மா இப்படி அழுதுட்டே இருக்க? வர வழியெல்லாம் தான் அழுத.. இப்பவும் அழற.. பிளீஸ், கன்ட்ரோல்'
'இல்லீங்க ராம்! முடியல! ரோட்ல போற சின்ன குழந்தை எல்லாம் பாக்கறச்சே கஷ்டமா இருக்கு. தப்பு பண்ணறமோன்னு கில்டியா இருக்கு'
'...'
'டாக்டர் சொன்னது எல்லாம் காதுக்குள்ளே கேட்டுட்டே இருக்கு'
'ம்ம்..'
'ராம்! நாம ஒரு விஷயம் முடிவு பண்ணோம், இல்லைங்கலை. ஆனா அதுக்கேத்த மாதிரி நாம தான் உஷாரா இருந்துருக்கணும். நாம பண்ண முட்டாள்தனத்துல ஒண்ணும் தெரியாத ஒரு சின்ன ஜீவன ஏன் பலி கொடுக்கணும்?'
5
'என்ன ராம், இன்னும் எழுந்துக்கலையா?'
'ம்ம்..'
'தூங்கினீங்களா?'
'அத விடு, ஆர் யு ஆல்ரைட்?'
'ம்ம்..'
'அழுது முடிச்சாச்சா?'
'ம்ம்..'
'சரி விடு. இந்தா ஸ்வீட்! என்ன பாக்கற. டாக்டர் சொன்னது, நீ அழுதது - எல்லாம் என் மனச மாத்திடிச்சு. ஏய் இப்பவாவது சிரிம்மா'
6
'என்ன ராம், இப்படி பாதி ராத்திரி வந்து இருக்கீங்க. இப்போ தானே சாயந்திரம் வந்து நீங்க முடிவ மாத்தின விஷயத்த சொன்னீங்க. இப்போ என்ன?'
'டாக்டர், என்னனு தெரியல. அனுக்கு ரொம்ப வயறு வலிக்குதாம். ரொம்ப நேரமா துடிச்சிட்டு இருக்கா. கார்ல இருக்கா'
'அப்படியா, உள்ள கூட்டிட்டு வாங்க'
'கொஞ்சம் வெளில இருங்க ராம், லெட் மீ செக் ஹர்'
'ராம், உங்க கிட்ட பேசணும், இப்படி வாங்க'
'சொல்லுங்க டாக்டர்'
'வெரி சாரி ராம். நீங்க வேண்டாம்னு நினைச்சப்போ இருந்த கரு, இப்போ வேணும்னு மனசு மாறினதும் இல்லாம பொயிடுச்சு. மனச தேத்திக்குங்க'
'...'
Wednesday, November 08, 2006
Subscribe to:
Posts (Atom)