
அப்படி இப்படி சிம்பிளா ஒரு park கட்டி முடிச்சிடுவேன். அதுல daily எதாவது change பண்ணிட்டே இருப்பேன். கடுகு தூவி தண்ணி ஊத்தி அழகா குட்டி குட்டியா செடி முளைக்கும். ஒரு தடவை எக்கச்சக்கமா மாத்தரேன் பேர்வழின்னு zoo இருந்த எடத்துல main road வர மாதிரி செஞ்சிட்டேன். அடுத்த நாள் main road முழுக்க ஒரே கடுகு காடு. அப்புறம் என்ன, திருப்பியும் மாத்தி வச்சி ஒரு வழி ஆக்கிட்டேன்.
பார்க் கட்டறதுக்கு முன்னாடி பொம்மைகள படில அடுக்கிடுவோம். அதுல பயஙகர காமெடி நடக்கும். எங்க வீட்ல mostly 5 படி போடுவோம். top படில, அந்த காலத்து giant size பொம்மையெல்லாம் உக்காந்துக்கும். எல்லாம் எங்க பாட்டிக்கும், அம்மாக்கும் அவங்க கல்யாணத்துல சீர் கொடுத்த பொம்மைங்க - ஒண்ணொண்ணும் என்ன அழகு, இன்னைக்கும் அந்த பெயிண்ட் போகவே இல்ல. இப்பொ வர பொம்மை யெல்லம் ஒண்ணுமே இல்ல அத கம்பேர் பண்ணா. infact there was a huge collection at our home. but 80' ல ஒரு தடவை எக்கசக்கமா மழை பெஞ்ஜி madrasசே தண்ணீல மிதந்ததுல நிறைய போயிடுச்சாம். இப்போ வந்த மழைக்கு என்ன அச்சோ எங்க பொம்மை யெல்லாம், இந்த வருஷ கொலு வரச்சே தான் தெரியும்.
கொலு வச்சி வச்சி பழகினதால order மாத்தாம சூப்பரா அப்பா வெப்பாரு. நாங்கல்லாம் டெண்ஷனோட பாத்துட்டு இருப்போம் - bcoz அது customized படி ஆச்சே, அப்படி இப்படி லேசா பிசகினாலும் பொம்மையெல்லம் கீழ விழுந்து தர்கொலை பண்ணிக்குமே. but touchwood இப்போ வரைக்கும் அந்த மாதிரி எந்த சம்பவமும் நடக்கல. அதுல எனக்கு கிரிஷ்ணர் பொம்மை ரொம்போ பிடிக்கும் - ஒரு மாதிரி teal colorல, புல்லாங்குழல கைல வச்சிகிட்டு இடுப்புல கை வச்சி செம cuteஆ இருக்கும். ஆனா அது பக்கத்துல அதே sizeல ஒரு சூப்ப்ர் ஆண்டாள் பொம்மை வெப்பாங்க பாருங்க, எனக்கு அத பிடிக்காது :)
நடுல பார்க்கடல் பொம்மை ஒண்ணு வச்சிடுவோம். இந்த பக்கம் லக்ஷ்மி, சரஸ்வதி, துர்கா மூணு பொம்மையும் (விழா நாயகிகள் ஆச்சே) நிக்கும். அந்த பக்கம் நம்ம favourite கிரிஷ்ணரும், புடிக்காத ஆண்டாளும். அதுக்கு பக்கத்துல வெங்கி alias வெங்கடாசலபதி alias பாலாஜி and mrs.பாலாஜி. ஒகே, முதல் படி ஒவர்.
செகண்ட் படில சிவா & family, இன்னொரு பாலாஜி (மேல் திருப்பதி, சாரி, மேல் படி பொம்மை பாட்டிது, இந்த பொம்மை அம்மாது) அன்ட் mrs. பாலாஜி, ராமர் & family, இதெல்லம் fill ஆகும். இதுல பாலாஜி செட்ல பாலாஜிக்கு இந்த பக்கம் இன்னொரு அலமேலு பொம்மை (அது வேற பாக்கவே பயங்கரமா இருக்கும், எவன் பெயிண்ட் பண்ணானோ தெரில) நைஸா செட் பண்ணி இருப்பாரு. விஷயம் இது தான் - வெள்ளத்துல அடிச்சி போனதுல இந்த செட்-அப்போட husbandம் ஒரு பொம்மை. எங்கம்மாக்கு சீரா வந்துதே, so எங்கப்பா எதுக்கு வம்புனு சேத்தே வச்சிடுவாரு. அதே மாதிரி சிவன் familyக்கு இந்த பக்கம் ஒரு பிள்ளையார், மயில் மேல் முருகர் இருக்கும். அத தவிர என்னவோ சிவனோட செட்-அப்ல பொறந்த பிள்ளை மாதிரி இன்னொரு முருகர் (இது வ்ந்து மலை மேல் முருகர்) இருக்கும்.
ஒரொரு தடவை ராமர் செட் வெக்கரச்சேவும் தமாஷா இருக்கும் - ஒண்ணு சீதை ராமர்க்கு பதிலா லக்ஷ்மணர் பக்கத்துல ஜாலியா நிப்பா.. ராமர் பாவம் ஙென்னு பக்கத்து முருகர பாத்துட்டு நிப்பாரு; இல்லைனா அனுமாரும் லக்ஷ்மணரும் எதோ கூட்டு சதி செய்ற மாதிரி உக்காந்து இருப்பங்க - அடப்பாவீங்களானு ராமரும் சீதையும் நிப்பாங்க. எங்க வீட்ல இந்த கிரிஷ்ணர் ஆன்டாள் ஜோடி கொஞ்சம் இல்லை நிரையவே உண்டு. அத அங்கங்க ரொப்பி வச்சிடுவோம். so at times சீதா கொஞ்சம் advanceஆ கிரிஷ்ணரோட ஜோடி போட்டு நின்னுடுவா. இல்லைனா இந்த பக்கத்துலேந்து ஆன்டாள் லக்ஷ்மணர டாவடிச்சிட்டு நின்னுட்டு இருக்கும். என்ன தான் கரெக்ட்டா வச்சாலும் இந்த ராமர் செட்ட மட்டும் கலாயிக்காம விட மாட்டோம் நாங்க. இதுல பொம்மை அடுக்கறதுக்கு என் cousin brother வேர வருவான் - அய்யோ அவன் வந்தா இன்னும் ஜாலி தான். சிரிச்சிட்டே இருப்போம். ஒரு தடவை எங்கப்பா மீனாக்ஷி பொம்மைய ரெண்டாவது படில வெக்கரதுக்கு பாத்துட்டு இருந்தாரு. அப்டியே கைக்கு கீழ அரிக்கவே சுவாரஸ்யமா சொரிஞ்சிகிட்டே 'ஏய் அந்த மீனாக்ஷி எங்க காணோம்'னு கேட்டாரு. இவன் சும்மா விடுவானா - 'என்ன பெரிப்பா, மீனாக்ஷிய எங்க கைக்கு கீழ எங்கயோ தேடிட்டு இருக்க'னு கலாச்சி தள்ளிட்டான். இன்னைக்கும் அந்த பொம்மைய வெக்கரச்சே நாங்க பயங்கரமா சிரிப்போம்.
ok, மத்த படில வெக்கர பொம்மையெல்லாம் in next part. (BTW the picture posted here is taken from net only and not எங்காத்து கொலு )
'எங்காத்துல கொலு வச்சிரிக்கோம்' - will continue...
PS - BTW all the comments written here are just about the dolls and not to hurt any god or religion. forgive me for any offence taken unknowingly.