Thursday, June 21, 2007

kalikalam

'ஹல்லோ, யார் பேசறது, என்னது, ஊர்லெந்து குமாரா?? ஹய்யோ.. கண்ணு, நீ எப்படி கீற? என்னபா.. உடம்பு ஏதும் சரி இல்லையா.. என்ன கண்ணு, சாம்பார் செய்யணுமா.. அதுக்கா போன் பண்ண, நல்ல புள்ளை.. செரி ஒரு எலுமிச்சை அளவுக்கு புளி எடுத்து...................... செரிப்பா, ரொம்பொ நேரமா பேசிட்ட.. போய் தூங்கு'
...

'ஹல்லோ, யார் பேசறது, என்னது, ஊர்லெந்து குமாரா?? ஹய்யோ.. கண்ணு, நீ எப்படி கீற? என்ன கண்ணு, ரொம்போ நாளாச்சு நீ பேசியே... நைனா பாவம், ரொம்போ கொறப்பட்டுகிட்டாறு. வொங்கூட பேசணும்னு ரொம்பா ஆசப்பட்டாரு, பாரு இப்ப தான் வெளில போனாறு. அல்லாம் உனக்கு கல்யாணம் பண்ண தான்.. சொல்லு கண்ணு... என்னது.. என்ன சொல்றபா? எங்கள பத்தி எல்லாம் நெனச்சி பாத்தியா.. அய்யோ உங்க நைனா கேட்டா உசிரே பூடுமேபா.. ஏம்பா இப்படி செய்யற?... ஆங்?... செரி தான்.. செரி தான் கண்ணு.. இது உன் வாய்க்க தான்.. உன் பொண்டாட்டிய தேர்ந்தெடுக்க உனக்கு உரிம இருக்கு தான்... இருந்தாலும்.. ஆங்... என்ன கண்ணு, நான் கோவிச்சுக்கல.. செரி தன்...செரி.. செரி.. செ..ர்...ரி.. பாக்கறேன், முயர்ச்சி பண்ணறேன், வச்சிடவா, அப்பால போன் பண்ணு.. ஆங்...'
...

'ஹல்ல்லோ... ஆங்.. கண்ணு, நான் அம்மா தான் பேசுறேன். அத ஏன் கேக்குற.. உங்க நைனா கிட்ட விஷயத்த சொல்லி சமாதானப்படுத்தறதுக்குள்ளே நான் பட்ட பாடு... அம்மாடி!! வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சிட்டாரு! என்ன கண்ணு?? அ.ஆங்.. என்ன செய்யறத்து.. அப்பால நான் சமாளிச்சுட்டேன். என் கண்ணு, நெசம்மாவே அவள கட்டிகிட்டியா... இல்ல ராசா.. அப்டி எல்லாம் இல்ல, எனக்கு சந்தோஷம் தான். நீ நல்லா இருந்தாவே போதும்.. ஒரு தபா உன் பொண்டாட்டியையும் கூட்டிட்டு வாயேன்... ஆன்ன்.. என்னது?? டைம் ஆகிடுச்சா.. வச்சுடறியா.. செரிப்பா.. அப்றம் பேசு'
...

'ஹல்லோ.. அட குமாரு.. சொல்லுபா... என்னது, ஆ.. அப்படியா.. எனக்கு பேத்தி பொறக்க போவுதா.. அடடா... ரொம்பொ சந்தோஷம்பா... செரி, பேரனா இருந்தா என்ன.. பேத்தியா இருந்தா என்ன.. ஏன்பா.. மருமவள நல்லா பாத்துக்கோன, முடிஞ்சா ஊருக்கு வண்ட்டு போயேன்.. முடியாதா.. செரிப்பா. நைனாகிட்ட பேசுறியா.. அல்லோ.. அட, லைன் கட்டாகிடுச்சே...'
...

'குமாரு... ஆங், தெரியும் நீ தான்னு... பிள்ள நல்ல படியா பொறந்துடுச்சா... ரொம்பொ சந்தோஷம்.. மாரியாத்தாளுக்கு, இந்த வாரம் கூள்ளூத்தறேன்.. ஆ.. உனக்காக தான்.. பச்ச உடம்புக்காறி, புள்ளயும், பச்ச புள்ள, பாத்துக்கப்பா...'
...

'ஏம்பா. என்னப்பா.. மாசத்துல ஒரு தடவ தான் போன் செய்யற.. எங்கள எல்லாம் மறந்துட்டியா... செரி.. இப்ப தான் புள்ள கொஞ்சம் வளந்துருச்சுல்ல... ஊர் பக்கம் வாயேன்பா.. அட அட.. ஏங்கண்ணு கோச்சிகிறெ.. செரி செரி தான்.. விட்டுடு, கூப்படல இனிமெ'
...

'தம்பி... குமாரு.. நீ போன் பண்ண மாட்டியானு காத்துனுறுக்கேன்.. கண்ணு, நைனாவுக்கு ரொம்பொ உடம்பு முடீலப்பா.. ஆஸ்ப்பத்திரில சேத்துருக்கோம். பெரிய ஆபரேஷன் செய்யணுமாம். ரொம்போ செலவு ஆகுமாம். கொஞ்சம் பணம் அனுப்பினீனா.. நல்லா இருக்கும்பா.. என்னா உன் பொண்டாட்டிய கேக்கணுமா.. செரிப்பா.. கேட்டு சொல்லு.. வச்சிடறேன்.. புள்ளைங்கள கேட்டதா சொல்லு...'
...

'அய்யய்யோ.. குமாரு... உங்க நைனா இப்படி மோசம் பண்ணிட்டாருப்பா... கடசி நிமிஷம் வரைக்கும் உன் பேர தான் சொல்லிட்டு இருந்தாரு. உன்ன பாக்காமாலே போயி சேந்துட்டாரே... வாப்பா.. வந்து கொள்ளி வச்சிட்டு வாய்க்கரிசி போட்டுட்டு போப்பா.. என்ன.. நெறய வேலை இருக்கா... உன் பொண்டாட்டியாலயும் வர முடியாதா.. கண்ணு அவரு உங்க அப்பாடா... நீ இப்படி வர முடியாத அளவுக்கு இருக்கற பெரிய வேலையை வாங்கி கொடுக்க அவர் தானடா பாடு பட்டு, படிக்க வச்சாரு. செரி.. கடமை தான்.. யார் இல்லைன்னா.. அதே மாதிரி நீ வந்து கடசில பார்த்து கொள்ளி வக்கறதும் உன் கடமை தானே.. உனக்கு பாசமே இல்லயா... அலோ.. அலோ... அடப்பாவி டொக்குனு வச்சிட்டியே... என்னங்க பாருங்க இந்த அன்னியாயத்த...'
...

'சொல்லுபா குமார்.. பரவால்லப்பா.. நா காரியத்த எல்லாம் பாத்த்கிட்டன். பணத்துக்கா... என் நகையெல்லாம் வித்து ஒரு மாதிரியா செஞ்சிட்டோம். நீ இருந்து நடத்துலயேங்கற கொறை தான்ப்பா.. செரிப்பா.. அழல அழல.. நானா.. எதோ இருக்கேன்.. என்னது நீங்க வறீங்களா.. ரொம்போ நல்லது.. வாங்கப்பா... என்ன.. வக்கீலோட வரியா.. எதுக்குப்பா.. வீட்ட வித்துடறதுக்கா.. என்னப்பா சொல்ற? நான் எங்க போவேன். உன் கோட வந்துட்டா... செரிப்பா.. செரிப்ப...'

....
....

'இவங்க யாருனு தெரியாது. போன மாசம் ஒருத்தர் விட்டுட்டு போனாரு. குமாரு குமாருனு புலம்பிகிட்டே இருக்காஙக. குமார் வந்து கூட்டிட்டு போவான் நு எதிர்ப்பார்த்துகிட்டே இருக்காங்க... அதுவும் போன் அ பார்த்த ஷீ கெட்ஸ் ஹிஸ்டெரிக், பாவம்! '

6 comments:

ambi said...

pinniteeenga yekkaaa,

spelling mishtakes ellathaiyum manichu vitudaren. epdi dheedeernu ipdi oru kadhai ellam pottu...

avvvvvvvvvvvvvvvvvvvvvvv :)

shree said...

adappavi, colloquiala eludhi irukken, spelling mistake solltiye

ambi said...

yow! colloquialla pesinaalum spelling mishtake illama ezhuthanum.
ithoo sampleukku onnu:

இப்ப தான் வெளில போனாறு

sari, vidunga, namakku solla vantha matter thaan mukyam. :p

Daiii, yaarudaa athu? shree akka postaa kutham solrathu? :)

shree said...

he he he! tamil typing rombo kashtam pa. adhuvum officela alt-tab adichi adichi type panradhu adha vida kashtam. namakku layakku tanglish daan.

yenna pullaiyum killi vittu thottilum attara?? sari illa!

Sat said...

Hey, I am satish. I just swinged by your blog thru some other blog(s). This story that you have written was beautifully naratted. Literallaa oru gramathu amma va en kannu munaadi kindu vandhu niruthiteenga, excellent. Keep bloging. Have a great 2008 ahead.

Satish N (http://www.iyerpaiyan.com)

R-ambam said...
This comment has been removed by the author.