Friday, August 03, 2007

kavidhai kodumai

1) எதிலோ படித்தது - நச்சுனு இருக்கு -
மகனே.. நீ இருக்க
என் கருவறை இருந்தது...
நான் இருக்க
சிறு அறை கூடவா இல்லை
உன் வீட்டில்...?

2) ஸ்கூல் டைம் கவிதை -
பொருட்பாலுக்காக
காமத்து பாலை விற்றால்
அறத்து பாலுக்கு ஏன் கோபம் வந்தது??

3) எப்பொதோ படித்தது -
தனக்காக உயிர் தியாகம்
செய்த தீக்குச்சியை பார்த்து
உருகி அழுதது
மெழுகுவர்த்தி (அம்பி, ஸ்பெல்லிங் கரக்டா?)

4) முட்டையின் பயன்கள்:
பசிக்கு ஆம்லெட் போடலாம்,
கேக்கை ஸாப்ட் பண்ணலாம்,
மீந்து போன முட்டை ஓட்டில்
அழகழகாய் டிசைன் செய்யலாம்,
பெண்கள் பேஷியல் செய்து
அழகு படுத்தி கொள்ளலாம்,
ஈஸ்டர் அன்று
குழ்ந்தைகளுடன் விளையாடலாம்,
ஸைன்ஸ் படிக்கலாம்,
கொஞ்சம் பொருமையாக இருந்தால்
கோழி குஞ்சும் வரலாம்!

5) என் கொடுமை -

அழகழகாக விற்கிறார்கள்!
மேலேயும் எரிக்கிறார்கள்,
கீழேயும் குத்துகிறார்கள்!
புலம்புகிறது மெழுகுவர்த்தி -
மெழுகுவர்த்தி ஸ்டாண்டை பார்த்து.

3 comments:

dakaltiz said...

enne koduma ithu shree.... ;)
hittin ur page after a long long time...

ambi said...

நின் தமிழோடு விளையாடவே யாம் இங்கு வந்தோம் ஷ்ரியக்கா! :p


ஆஹா, எல்லாமே ஹைக்கூ மாதிரி நச்சுனு இருக்கு, without spelling mishtakes. :))

யாரோ said...

Nice ones, I liked the candle one...
Keep blogging... I hv made a haiku entry in my blog too
valaikkulmazhai.wordpress.com

-Karthi