Friday, November 28, 2008

டைம் ஆகுதே, ஐயோ...

வெய்யிலில் கட கடவென நடந்தேன். 9:30 க்கு பஸ் ஸ்டாண்ட் போய் விட வேண்டும். at least 10 மணிக்கு... என வேலைகளை plan செய்து வைத்திருந்தேன். ஆனால் இப்போதே மணி 10:15 ஆகி விட்டது. bus பிடித்து office சென்று சீட்டில் அமர 11 ஆகி விடும். ச்சே.. என்னை நானே நொந்து கொண்டேன். நானும் என் ப்ளான்னிங்கும்! ஒரு நாள் வண்டி இல்லன்னா ரொம்போவே பட வேண்டி இருக்கே. இந்த மதன் வேற... கொஞ்சம் கூட help பண்ணவே மாட்டான். evening ஊருக்கு போகணும், அதால வண்டி எடுக்கல. துணி மணி எல்லாம் அம்மா வீட்டுக்கு போய்டுச்சு. கிருதி கூட அம்மா வீட்ல இருக்கா. evening அம்மா வீட்லேந்து நேரா கிளம்பிடலாம். கிருதி குட்டிக்கு ஒரு shoe வாங்கிட்டு வரணும். இந்த chappal ரொம்போ பழசாயிடுச்சு. கேமரா எடுத்து வச்சானா மது, தெரியலியே... இப்படியெல்லாம் எண்ணங்கள் போய் கொண்டு இருந்த நேரம், என்னவோ மிக அருகில் சப்தம் வந்தது. திரும்பி பார்த்தால், அருகில் ஒரு ஆள் நின்று கொண்டு இருந்தான். பார்க்க பைத்தியம் போல எல்லாம் இல்லை, நன்றாக தான் இருந்தான். நான் திரும்பி நடந்து அவனை ஓர கண்ணால் கவனித்தேன். அவன் என் பின்னாலயே follow செய்தான். இது என்னடா வம்பு என வேகமாக நடந்தேன். அவனும் வேகமாக நடந்தான். இந்த மாதிரி ஆசாமிகளுக்காக தான் இன்று வண்டி இல்லை என்ற உடனே ஜீன்ஸ்-ஐ மாற்றி சுரிதாரில் வந்து இருக்கிறேன். அதுவும் துப்பட்டா எல்லாம் ஒழுங்காக தான் இருக்கிறது, பின்ன ஏன் இப்படி செய்கிறான். ஏதோ எனக்கு புரியாத வார்த்தைகளை சப்தமாக சொல்லி கொண்டு வேறு வந்தான். நான் ஓடினால் அவனும் ஓடினான். நான் வளைந்து நடந்தால், அவனும் வளைந்து நடந்தான். நான் பிள்ளையரை பார்த்து கும்பிட்டால் அவனும் பி.பா.கு. நான் ஒரு கல்லை தாவினேன், அவனும் அந்த க.தா. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. இன்னும் 2 அடி வைத்து road cross செய்தல் bus stand வந்து விடும். சட்டென்று நின்று திரும்பி அவனை பார்த்தேன். அவனும் நின்றன். திரும்பி நடந்தேன், அவனும் தி.ந. உடனே sudden பிரேக் pottu அவனை 'hello mister என்ன வேணும் உங்களுக்கு..' என்று சொல்லிய படியே நடந்தேன். சுத்தி இருந்த அனைவரும் என்னையே பார்த்தனர். அவனை சட்டென்று காணவில்லை. அப்படா விட்டது தொல்லை என்று bus ஸ்டாண்ட்-இல் நின்று கொண்டு இருந்தேன்.

ஒரு bus வந்தது. yellow board, என் stopping ல் நிற்காது. ச! அத்து வந்தது white board, அனாலும் என் stopping நிர்க்காதாம். அடுத்து இரண்டு M series bus வந்தது. கண்டிப்பாக ச்டோப்பிங்கே இல்லை என்றாலும் நிற்கும். முதலாவது நல்ல கூட்டம். அடுத்தது ok. சரி என்று அதில் தொற்றி கொள்ள போகும் நேரத்தில், அதில் footboard அடிக்கும் college பையந்கள், பஸ்-ல் ஏற எத்தனித்த எல்லோரிடமும், "இந்த பஸ் பிரேக் சரி இல்ல.... நின்னு நின்னு போகுது... slowa போகுது.. stoppingla பிரேக் புடிச்ச அடுத்த stopping போய் நிக்குது, ஏறாதீங்க" என்று அக்கறையாக சொல்லி கொண்டு இருந்தனர். எனக்கு ஏற்கெனெவே time ஆகி விட்டது. இவ்ளோ பிரச்னை இருந்தால் என் conductor-driver வண்டி ஓட்டனும. இந்த college பசங்க ஏன் இன்னமும் busla நிக்கனும்னு எனக்குள்ள plus minus போட்டு பார்த்து, சட்டென்று ஏறி விட்டேன். ஏறின உடனே நல்லவேளை seat கிடைத்தது.. மேலும் சில பேர் ஏறி கொண்டதும், வண்டி நகர்ந்தது. வண்டி மெதுவாக தான் சென்றது. இன்னும் 20-30 நிமிஷம் பஸ் பயணம். கொஞ்சம் நிம்மதியா இருப்போம் என்று நினைத்து கொண்டே, thirumbi "ஒரு spic வாங்குங்க" என டிக்கெட் pass செய்த வேளையில் சட்டென்று என் மடியில் கணம் வந்தது. என்னடா என்று திரும்பி பார்த்தால், யாரோ அடிடாஸ் bag போன்று ஒன்றை என் மடியில் வைத்து இருந்தார்கள். கூட்டமும் அவ்வளாக இல்லை, பின் ஏனிப்படி என்று நினைத்து கொண்டு இருக்கையில் "இந்தாமா ticket" என்று ticket வந்தது. சரி போனால் போகட்டும் என்று அந்த பாகை மடியில் வைத்து கொண்டேன்.

அந்த பைக்கு ஜிப் இருந்தும் மூடாமல் இருந்தது. மூட முடியாதபடி ஜிப் பிசகி இருந்தது. உள்ளே ஒரு அழுக்கு வேஷ்டியும் நிறைய அரிசிகளும் தென்பட்டது. அதை தூக்கி சரியாக வைத்த போது எதுவோ ஒன்று ஆடியது. அது வரையில் இல்லாத கிலி சட்டென்று என்னை ஆட்கொண்டது. ஹய்யயோஒ... ஊர் முழுக்க குண்டு வெடிச்சிட்டு இருக்கு, இப்ப என்னடானா ஏன் மடிலயே சந்தேகமா ஒரு பை இருக்கு.. ஒரு வேளை.. ஒரு வேளை.. இதுலேயும் குண்டு இருந்தா... ஹய்யயோ.. முருகா... என்ன காப்பாத்து, இது என்ன வம்பா போச்சு என்று நினைத்து பையின் சொந்தகாரனை நிமிர்ந்து அப்போது தான் பார்த்தேன். பார்த்தும் உறைந்தேன். அவன்... பார்க்க உயரமாக, மாநிறமாக, குளியல் என்றால் என்ன என்றே தெரியாமல் அழுக்காக இருந்தான். அதெல்லாம் விட, அவனுக்கு ஒரு கண் தான் இருந்தது. இன்னொன்று மூடியவாறு, permanent disabilityai அறிவித்தது. பார்த்தவுடன் எவரும் பயப்படுவர். குழந்தைக்கு பூச்சாண்டி காட்ட இவன் மிகவும் பயன் படுவன். அஹா... ராஜீவ் காந்திய கொன்ற சிவராசன் கூட ஒத்தை கண்ணன் தான் என்று தேவை இல்லாமல் தகவல் தந்தது ஏன் மூளை. போச்சுடா.. இன்றே கடைசி போல இருக்கு என்று ஒரு கிலி என்னை பற்றி கொண்டது.

என்னை சுற்றி ஒரு தரம் பார்த்தேன். எல்லாரும் அவரவர் உலகத்தில் இருந்தனர். சிலர் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு, சிலர் பெண்கள் உட்காரும் பக்கம் பார்த்து கொண்டு, பலர் cell phoneil பேசி கொண்டு, சிலர் மௌனமாக உள்ளுக்குள் அழுது கொண்டு, சிலர் பேசி கொண்டு, விளையாடி கொண்டு, டிரைவர் வண்டி ஒட்டி கொண்டு என எல்லாரும் ஒரு கொண்டு வில் இருந்தனர். ஆனால் நான்... பயத்தில் உறைந்து இருந்தேன்,. அவன்.. பயங்கரமாக இருந்தான். அய்யய்யோ இறைவா என்னை காப்பாற்று .. இந்த பைல குண்டு இருக்க கூடாது. உனக்கு 10 தேங்காய் உடைக்கறேன் பிள்ளயரப்பா என bus சட்டென்று பிள்ளையார் கோவிலை pass செய்த போது வேண்டி கொண்டேன். கடவுளுக்கு லஞ்சமா... hmm... இந்த மதுவால தான் எல்லாம். என்ன ஒரு நிமிஷம் officela கொண்டு விட்ருக்கலாம். busla போய்க்கோனு போய்ட்டான் என்று மது மேல் பழியை போட்டேன், வழக்கம் போல். இந்த மது என்ன செய்யவன்.... நான் இல்லைன்னு சந்தோஷமா இன்னொரு கல்யாணம் பன்னிப்பானா.. இல்ல ஐயோ என் பொண்டாட்டின்னு அழுவானா... ஹய்யோ என் பொண்ண யார் பார்த்துப்பா.. எப்படி வளப்பா.. அம்மா தான் வழக்கம் போல பாத்துகணும். அவள ஒரு டாக்டர் ஆக்கிடுங்க நு அம்மா கிட்ட சொல்லவே இல்லையே.. மது பாத்துப்பாநா இல்லை எனக்கென வந்ததுனு iruppana.. அவளுக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி கொடுக்கற வரைக்கும் அம்மாவால இருக்கா முடியுமா? இப்போ தான் 2 வயசகறது... futurela கிருதிக்கு ஏன் நியாபகமே இருக்காதே. cinema மாதிரி "மன்னவனே அழலாமா" nu மதுவை torture பண்ணுவேனா... அருமையா போயிட்டு இருக்கே என் life.. இப்படி அல்ப்பாயுசுல போயிடுவேன்.. என்று மனதுக்குள் புலம்பினேன்.

எங்கே அசைந்தால் குண்டு வெடித்து விடுமோ என்ற பயத்தில் ஆடாமல் அசங்காமல் உட்கார்ந்தேன். பஸ் குலுங்கும் போதெல்லாம் கலவரம் ஆனேன். ஊருக்கு டிக்கெட் எல்லாம் புக் பண்ணி இருக்கேனே... எப்படி எல்லாம் இந்த 3 நாள் leaveai கொண்டாடனும்னு நெனச்சேன்.. எவ்ளோ நாள் கழிச்சு லீவ் கெடச்சிருக்கு, அதெல்லாம் போயிடும் போல இருக்கே.. பக்கத்தில் ஒரு சின்ன பையன் தன் அம்மாவின் மடியில் அவள் சேலை தலைப்பில் ஒளிந்து கொண்டு இருந்தான். பார்த்தால் காய்ச்சல் வந்தவன் போல இருந்தான். ஹய்யோ இந்த சின்ன குழந்தை கூட செத்துடுமே.. இறைவா.. என்ன சோதனை! அந்த college பசங்க எல்லாம் செத்துடுவங்களே... அப்பவே சொன்னாங்களே இந்த பஸ்ல ஏற வேணாம்னு ... அது கடவுள் நமக்கு சொன்ன செய்தியா... யார் யார் மனசுல என்ன இருக்கோ, யார் இருக்காங்களோ, எல்லாரும் கூண்டோட கைலாசம் போயுடுவோமே... சில்லரை இல்லன்னு எரிஞ்சி விழாத conductor, கடவுள் அங்க உன் சில்லறையெல்லாம் எண்ணிகிட்டு இருப்பாரு ... வேறு யாரும் இதை கையில் வைத்து கொண்டு இருந்து வெடித்தல் atleast நம்ம முகமாவது ஒழுங்கா தெரியும். என் மடியிலே வெடித்தால், சரியா தெரியாதே.. எப்படி அடையாளம் கண்டுபாங்க நான் தான்னு... என்று தோணியது. இந்த bus வேற இவ்வளோ slowa போறது ச்சே... பெரிய size கோயில் வந்தால் கூட கண்டுக்காத நான் அப்போது பாடிகட் முனிஸ்வரன் கோவிலை கூட விட்டு வைக்க வில்லை. முனிச்வர, என்னை காப்பாற்று என கும்பிட்டு வைத்தேன். பேசாம அதுத stoppingla இறங்கி வேற bus புடிக்கலமா.. hmm.. ஏற்கெனெவே டைம் ஆகிடுது.. அத்தோட இப்படி அருமையா உக்கார இடம் கிடைக்குமா.. அட ச.. lifeae ஊஞ்சல் ஆடுது, என்ன இப்படி யோசிக்கற என்று என் மனதுக்குள்ள ஏஞ்சல்ஸ் அண்ட் டெமொன்ஸ் சண்டை போட்டு கொண்டு இருந்தது. இன்னும் 10 minutes இருக்கே என் stopping வர.. ஹய்யோ இறைவா.. spic வர வரைக்கும் வெடிக்க விடதயேன். ச்சே என்ன இப்டி selfisha இருக்கே.. மறுபடியும் angels and demons. hayyo, லைப்ரரி புக்ஸ் வேற திருப்பி கொடுக்கணுமே என்று பொறுப்பாக யோசித்து என்னுள் இருக்கும் அங்கெல். வாழ்க! காலையில் என்னை follow செய்த ஆசாமி - அந்த incident வேறு வந்து குழப்பியது. ஒவ்வொரு நொடியும் செத்து கொண்டு இருந்தேன். conductor இடம் சொல்லலாமா.. ச்சே ரொம்போ டூ மச்ஒ? செரி எங்கே அந்த ஆள், அவனிடமே இதை கொடுத்து விடலாம் என்று நினைத்து நிமிர்ந்து பார்த்தால்.... பார்த்தால்... அந்த ஆளை காணவில்லை. எனக்கு அழுகையாக வந்தது. சுற்று முற்றும் பார்த்தாலும் காணவில்லை. செரி பேசாமல் கண்டக்டர் இடம் சொல்லி இந்த பைய்யை தூக்கி போட சொல்ல வேண்டியது தான். மதுவாக இருந்தால், இந்த பைய்யை எப்போதோ தூக்கி வெளியே போட்டு இருப்பான். அவன் தைரியசாலி. சரி இன்னும் 1 stopping தான் என்று திடபடுத்தி உட்கார்ந்தேன். bus கிளம்பியதும் எழுந்து விடுவோம் என எண்ணி இந்த பை என குரல் கொடுத்தேன். எனக்கு பின்னால் இருந்த seatil இருந்து கொடும்மா என soft குரல் கேட்டது. திரும்பி பார்த்தால்... அந்த ஒ.க. அங்கே உட்கார்ந்து இருந்தான். ஒரு பக்கம் வெட்கம், ஒரு பக்கம் கோவம், ஒரு பக்கம் சந்தோஷம், ஒரு பக்கம் அதிர்ச்சி என என் மனதுக்குள் ஜுகல்பந்தியே நடந்தது. . கோவமாக இந்தாங்க உங்க bag, உக்காந்த வுடனே வாங்கிட்டு இருக்கலாம் இல்லை என முறைத்து கோவமாக சொன்னேன். வெட்கமாக புன்னகைதான் ஒ.க. போடாங்... என மனதுக்குள் கருவியபடியே busai விட்டு இறங்கினேன். bus போனதும் சுகமான கற்றை சுவாசித்தேன். மணி 10:40 தன் ஆகி இருந்தது. பரவில்லை!

2 comments:

நாகை சிவா said...

:))

Typical women thinking

:))

Well narrated

ambi said...

Good Flow,
table tennis match narration flow (nyabagam irukkaa?) :p

konjcham paragraph pirichu ezhuthunga thaayi, kannu valikuthu.

expecting more stories. :)